தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எந்த பக்கமும் சாய்வார்கள்: மைத்ரேயன் எம்.பி.

தினகரனுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது நம்பும் படி இல்லை. அவர்கள் எந்த நேரத்திலும் எங்கும் மாறுவார்கள் என அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி எம்.பி. மைத்ரேயன் கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எந்த பக்கமும் சாய்வார்கள்: மைத்ரேயன் எம்.பி.
Published on

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி எம்.பி. மைத்ரேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இப்போதைக்கு இணைய வாய்ப்பு இல்லை. நாங்கள் சசிகலாவையும், தினகரனையும் நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால் சசிகலாவோ 60 நாட்கள் கெடு கொடுத்திருப்பதாக தினகரன் அறிவிக்கிறார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இப்போது அவர்களுக்குள் நடப்பது போலி சண்டை அவர்கள் நடத்துவது அதர்ம யுத்தம். நாங்கள் நடத்துவது தர்மயுத்தம். தினகரன் சந்தர்ப்பவாதத்துக்காக அரசியல் நடத்துகிறார்.


தினகரனுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது நம்பும் படி இல்லை. அவர்கள் எந்த நேரத்திலும் எங்கும் மாறுவார்கள். ஒருவேளை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கும் ஆதரவை அவர்கள் திரும்ப பெறும் சூழ்நிலை வந்தாலும் நாங்கள் எடப்பாடி அரசை ஆதரிக்க மாட்டோம்.

எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பல திருப்பங்கள் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com