

சென்னை:
அரக்கோணம் யார்டு பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ரெயில் சேவையில் இன்று (வெள்ளிக் கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* தனாபூர்-பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12296), கோரக்பூர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12511), சில்சார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12516), காமாக்யா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (12552), தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (13351) ஆகியவை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு திருத்தணி நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை சென்டிரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் (22651/52), ஈரோடு- சென்னை சென்டிரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650) ஆகிய ரெயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
* மங்களூரு-சென்னை சென்டிரல் மெயில் (12602) 45 நிமிடங்களும், சென்னை சென்டிரல்-மும்பை சி.எஸ்.எம்.டி. மெயில் (11028) 3 மணி 5 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும்.
* சென்னை சென்டிரலில் இருந்து மதுரை நோக்கி புறப்படும் எக்ஸ்பிரஸ் (20601), திருப்பதி நோக்கி புறப்படும் எக்ஸ்பிரஸ் (16053/16203), திருப்பதியில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் (16058/54), அரக்கோணம்-ஜோலார்ப்பேட்டை எக்ஸ்பிரஸ் (16085/86) முழுவதும் ரத்து.
* சென்னை சென்டிரல்-அரக்கோணம் பயணிகள் ரெயில் (56001/02), அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் (56003/04), காட்பாடி நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் (56007/08), வேலூர் நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் (56009/10), கடப்பா நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் (56011/12) ஆகியனவும் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.