சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மதுரை பந்தர்ஸ் அணி வீரர்கள்
மதுரை பந்தர்ஸ் அணி வீரர்கள்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நத்தத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ்.

மதுரை பாந்தர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் பெரிய சாமி, ஹரிஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கங்கா ஸ்ரீதர், கோபிநாத் இறங்கினர். கங்கா ஸ்ரீதர் 6, கவுசிக் காந்தி 6, ஆரிப் 0, ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் உடன் சசிதேவ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கோபிநாத் 45, சசி தேவ் 51, முருகன் அஸ்வின் 4, சித்தார்த் 0, ஹரிஷ் குமார் 23, ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.  

இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் தன்வர், ஆகாஷ் ஆகியோர் 3 விக்கெட்டும் கெளசிக், ரகில் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com