மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புகுந்துநோயாளி படுகொலையில் 5 பேர் கைது

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து நோயாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on: 

மதுரை:

மதுரை கரும்பாலை பி.டி.காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 5-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து முருகனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முருகனின் மனைவி நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, விக்னேஸ்வரன், கரண் ராஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com