விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?- தமிழக அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி

அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.
விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?- தமிழக அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி
Published on

தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோட்டில் நேற்று ஒரு கார் தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் சாலையில் சென்றது. இந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் பத்திரிகைகளிலும், டி.வி.சேனல்களிலும் செய்தியாக வெளியாகின.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் வழக்குகளை இன்று காலையில் விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர், தாம்பரத்தில் நேற்று நடந்த விபத்து துரதிருஷ்டவசமானது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அவர் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நீதிபதி கூறியதாவது:-

‘அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் மோட்டார் வாகன உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்று மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனையை 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையில் படித்து பார்த்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை வருகிற 17-ந் தேதிக்கு முடிவு செய்வேன்.’

X

Maalai Malar
www.maalaimalar.com