உலக கோப்பை கால்பந்து - தங்க பந்து விருது வென்ற லூகா மோட்ரிச்

குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தங்க பந்து விருதை வென்றார். #WorldCup2018 #LucaModric #GoldenBall
உலக கோப்பை கால்பந்து - தங்க பந்து விருது வென்ற லூகா மோட்ரிச்
Published on

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து, உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

குரோசியா அணி கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது. இதேபோல், உலக கோப்பையில் 6 போட்டிகளில் 6 கோல்கள் அடித்த தங்க காலணி விருது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் தியாபட் கோர்டாய்க்கு வழங்கப்பட்டது. 

இந்த உலக கோப்பையின் இளம் வீரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் எம்பாப்வே பெற்றார். #WorldCup2018 #FifaWorldCup2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com