ஆண்டிப்பட்டி அருகே மணல் அள்ளிய லாரி பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே ஓடையில்அனுமதி இன்றி மணல் அள்ளி இருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணல் அள்ளிய லாரி பறிமுதல்
மணல் அள்ளிய லாரி பறிமுதல்
Published on: 

ஆண்டிப்பட்டி அருகே வாலூத்து ஓடையில் இருந்து மணல் அள்ளி செல்வதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, தனிப்பிரிவு போலீசார் மணிவாசகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஓடையில் இருந்து லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

மணல் அள்ளி இருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தப்பியோடியவர்கள் பிராதிக்காரன்பட்டியை சேர்ந்த பாண்டியன் மற்றும் நாச்சியார்புரத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்றும், அவர்களுக்கு சொந்தமான லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com