பாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா

நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. #NationalMedicalCommissionBill #WinterSession
பாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா
Published on

புதுடெல்லி:

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பி கருத்துக்களை கேட்க வேண்டும் என பல்வேறு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவை நிலைக்குழுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுப்பி வைத்தார்.

இதனால், நடப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.பாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா #NationalMedicalCommissionBill #WinterSession

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com