தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பேச்சு- மு.க.ஸ்டாலின் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பேசியதாக அளித்த புகாரின்பேரில் மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019 #MKStalin
தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பேச்சு- மு.க.ஸ்டாலின் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
Published on

பொள்ளாச்சி:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 4-ந் தேதி கோவை தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். பின்னர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

பிரசாரத்தின் போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. வக்கீல் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் தொண்டாமுத்தூர் போலீசார், மு.க. ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதே போல அ.தி.மு.க. வக்கீல் வெற்றிவேல் என்பவரது புகாரின் பேரில் மு.க. ஸ்டாலின் மீது குனியமுத்தூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி தொகுதி பறக்கும் படை அலுவலர் திருமலை சாமி பொள்ளாச்சி தாலுகா போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறியிருந்தார்.

புகாரின்பேரில் மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019 #MKStalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com