ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுத்த போது பிச்சை எடுத்த பெண்ணை கரம் பிடித்த டிரைவர்

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுத்த போது மனம் இறங்கிய டிரைவர் பிச்சைக்காரியை திருமணம் செய்த கொண்டார்.
திருமணம் செய்து கொண்ட அனில், நீலம் தம்பதியர்
திருமணம் செய்து கொண்ட அனில், நீலம் தம்பதியர்
Published on

கான்பூர்:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லலித் பிரசாத் என்ற வியாபாரியிடம் டிரைவராக இருப்பவர் அனில்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தெரு ஓரங்களில் வசிப்பவர்கள் கஷ்டப்படுவதை அறிந்த வியாபாரி லலித் பிரசாத் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க தொடங்கினார்.

கான்பூர் நகரில் பல்வேறு தெருக்களுக்கும் அவர் தனது டிரைவர் அனிலுடன் சென்று உணவு வழங்கினார். அப்போது டிரைவர் அனிலும் உணவு பொட்டலங்களை எடுத்துச்சென்று கொடுப்பது உண்டு.

தினமும் அவர் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு இளம்பெண் தனது தாயுடன் வந்து உணவு பொட்டலங்கள் வாங்குவதை கண்டார்.

இதனால் அந்த பெண்ணுக்கும், டிரைவர் அனிலுக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் அவர் ஏன் பிச்சை எடுத்து கஷ்டப்படுகிறீர்கள். என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது அந்த பெண் தனது பெயர் நீலம் என்றும், தனது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் தனது சகோதரர் தன்னை வீட்டில் இருந்து விரட்டி விட்டதாக தெரிவித்தார். மேலும் தாயுடன் வெளியேறிய அவர் பிழைப்பதற்கு வேலை எதுவும் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்ணீர் விட்டார்.

அவர் மீது மனம் இறங்கிய டிரைவர் அனில் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். தனது முதலாளி லலித் பிரசாத்திடம் இதுபற்றி தெரிவித்தார். அவர் அனில்-நீலம் இருவருக்கும் நேற்று திருமணம் செய்து வைத்தார்.

இதுபற்றி நீலம் கூறுகையில், “கடவுள் என்னை சோதித்ததாக தினமும் அழுவேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஒருவேளை சாப்பாட்டுக்குகூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால் கடவுள் என்னை கைவிடவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com