

அர்ஜென்டினா கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக கருதப்படும் ஜாம்பவான் டியகோ மரடோனா, செர்ஜியோ ரமோஸை விட அட்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடி வரும் டியகோ காடின் சிறந்த வீரர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் மரடோனாவை விட மெஸ்சிதான் அர்ஜென்டினாவின் தலைசிறந்த வீரர் என்று ரமோஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ரமோஸ் கூறுகையில் ‘‘அர்ஜென்டினாவில், அங்குள்ளவர்களுக்கு கால்பந்து வரலாற்றில் மரடோனாதான் சிறந்த வீரர் என்பது தெரியும். என்னைப் பொறுத்த வரையில் மெஸ்சிதான்.
ஈரான் வீரர்கள் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருந்தனர். அதேசமயம் நாங்கள் வேறு வழியில் வெற்றி பெற விரும்பினோம். எங்களால் அனைத்து இடத்திலும் முன்னேற்றம் காண முடியும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.