போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் -நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆளுநர்

ஜம்மு காஷ்மீரில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட 3 இளைஞர்களின் குடும்பத்தினரை துணைநிலை ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி என்கவுண்டரில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அப்பாவிகள் என்பதும் ராணுவ விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில், உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று ஷோபியான் மாவட்டத்திற்கு சென்றார். 

பிரதான சாலையில் இருந்து சுமார் 4  கிமீ தூரம் கரடுமுரடான மலைப்பாலையில் நடந்து சென்று டார்காசி கிராமத்தை அடைந்த துணைநிலை ஆளுநர், அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்றும், தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் கூறியதையும் தெரிவித்துள்ளார். 

மேலும், போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஆளுநர் உறுதி அளித்தார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com