ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் குளூஸ்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குளூஸ்னர்
குளூஸ்னர்
Published on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் பில் சிம்மன்ஸ். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, புதிய பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

50-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதில் தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கிய குளூஸ்னரை தேர்வு செய்து தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com