லாலாப்பேட்டை அருகே கபடி போட்டி

லாலாப்பேட்டை அருகே பிள்ளபாளையத்தில் கபடி போட்டி நடைபெற்றது.
கபடி போட்டி
கபடி போட்டி
Published on

லாலாப்பேட்டை:

லாலாப்பேட்டை அருகே பிள்ளபாளையத்தில் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் முசிறி, காட்டுப்புத்தூர், சேலம், தோகைமலை, குளித்தலை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com