

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மேல்போர்னிலும், தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் செஞ்சூரியனிலும் நடைபெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் லாபஸ்சாக்னே அரைசதமும், இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வீரர் குயிண்டான் டி காக் முதல் இன்னிங்சில் 95 ரன்களும் விளாசினர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த லாபஸ்சாக்னே ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
குயிண்டான் டி காக் 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2-வது இடத்திலும் உள்ளனர்.