தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது- எல்.முருகன்

தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளதாக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
பாஜக மாநில தலைவர் எல் முருகன்
பாஜக மாநில தலைவர் எல் முருகன்
Published on

கோவை:

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோவையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பேரவையில் பாஜக உறுப்பினர்கள் கணிசமான அளவில் இருப்பர்.

கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை; பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும்.

சசிகலா சொத்து முடக்கத்தில் சட்டம் அதன் கடமையை செய்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், கூட்டம் கூடியதாக வழக்கு போட்டால் அத்தனை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்கு போட வேண்டியிருக்கும் என்று கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com