ஸ்ரீதேவி மறைவுக்கு அத்வானி, ராகுல் காந்தி இரங்கல்

துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #sridevideath #LKAdvani #RahulGandhi
ஸ்ரீதேவி மறைவுக்கு அத்வானி, ராகுல் காந்தி இரங்கல்
Published on

புதுடெல்லி:

துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், இந்திய திரைப்பட துறையில் ஸ்ரீதேவி, ஒரு பிரபலமான நட்சத்திரமாக இருந்தார். அவரது பங்களிப்பு பாலிவுட்டை கடந்து, பல தமிழ், தெலுங்கு மற்றும் பிற பிராந்திய மொழித் திரைப்படங்களிலும் உள்ளது. இந்த அர்த்தத்தில், தேசிய ஒருங்கிணைப்பில் இந்திய சினிமாவின் பெரும் பங்களிப்பை அவர் அடையாளப்படுத்தியுள்ளார், என கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் பிடித்த நடிகைகளுள் ஒருவரான ஸ்ரீதேவி அதிர்ச்சியூட்டும் வகையில் திடீரென்று மரணமடைந்தது பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஸ்ரீதேவி ஒரு நம்பமுடியாத திறமையான மற்றும் பல்துறை நடிகை ஆவார், அவரது மிகப்பெரிய வேலைத் தொகுப்பானது பல்வேறு வகையிலும், மொழிகளிலும் பரவியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவளுடைய ஆத்மா சாந்தி அடையட்டும், என கூறியுள்ளார். #sridevideath #LKAdvani #RahulGandhi #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com