

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் அந்நாட்டின் தோகா நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் கிவிடோவா , முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகியை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என வோஸ்னியாகி கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை கிவிடோவா 7-6 (7-3) என போராடி கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை கிவிடோவா 7-5 என கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 7-6 (7-3), 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.