காஷ்மீர்: எல்லை தாண்டி செல்ல முயன்ற 4 சிறுவர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்பு

காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியிலிருந்து எல்லை தாண்டி பாகிஸ்தான் செல்ல முயன்ற 4 சிறுவர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
காஷ்மீர்: எல்லை தாண்டி செல்ல முயன்ற 4 சிறுவர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்பு
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியிலிருந்து எல்லை தாண்டி பாகிஸ்தான் செல்ல முயன்ற 4 சிறுவர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் இன்று எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் எல்லையை கடப்பதை கண்டறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் சிறுவர்களை பத்திரமாக மீட்டனர்.

தவறுதலாக அவர்கள் எல்லை தாண்டி செல்ல முயன்றுள்ளதாகவும், உரிய அறிவுரை கூறி பெற்றோர்களிடம் சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com