ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் தரவரிசை: 2-வது இடத்திற்கு முன்னேறினார் குல்தீப் யாதவ்

ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசையில் இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICC
ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் தரவரிசை: 2-வது இடத்திற்கு முன்னேறினார் குல்தீப் யாதவ்
Published on

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று ஐசிசி கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது. இதில் குல்தீப் யாதவ் முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்ற முக்கிய நபர்களில் ஒருவரான மிட்செல் சான்ட்னெர் நான்கு இடங்கள் ஜம்ப் செய்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com