கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை

கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோழிக்கோடு விமான நிலையம்
கோழிக்கோடு விமான நிலையம்
Published on

புதுடெல்லி:

கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது, இதில் 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com