கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல் - முதல் வெற்றி யாருக்கு?

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றன.
தினேஷ் கார்த்திக் - வார்னர்
தினேஷ் கார்த்திக் - வார்னர்
Published on

அபுதாபி:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபில் நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் எந்த அணி முதல் வெற்றியை பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி மும்பையிடமும் தோற்று இருந்தது.

இரு அணிகளும் இதுவரை 17 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 10 போட்டியிலும், ஐதராபாத் 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com