கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் பி.வெற்றிவேல் வீதி வீதியாக பிரசாரம்

கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் பி.வெற்றிவேல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். #AMMK
கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் பி.வெற்றிவேல் வீதி வீதியாக பிரசாரம்
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.வெற்றிவேல் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுவதால் மிகுந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தொகுதியில் நன்கு அறிமுகமான இவர் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டி வருகிறார். கொடுங்கையூர், முத்தமிழ் நகர் பவானி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நேற்று பிரசாரத்தை தொடங்கிய அவர் மார்க்கெட் பகுதி முழுவதும் வாக்கு சேகரித்தார்.

1 முதல் 8 வரை உள்ள பிளாக்குகளில் அனைத்து தெருக்களிலும் ஜீப்பிலும், ஆட்டோவிலும் சென்று வாக்கு சேகரித்தார். கருணாநிதி தெரு, அம்பேத்கர் தெரு, காமராஜர் சாலை, காந்தி நகர், டீச்சர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேட்பாளர் வெற்றிவேல் கேட்டுக் கொண்டார். அவருக்கு சிறுபான்மை மக்களும், பொது மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர்.

பிரசாரத்தில் நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #AMMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com