கேகேஆர் வீரர் டாம் பாண்டன் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து அசத்தல்

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ள டாம் பாண்டன் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் விளாசினார்.
டாம் பாண்டன்
டாம் பாண்டன்
Published on

இங்கிலாந்தின் இளம் வயது பேட்ஸ்மேன் டாம் பாண்டன். 21 வயதான இவரை ஐபிஎல் ஏலத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. அப்போது அறிமுகம் இல்லாத 21 வயது இளைஞரை கொல்கத்தா அணி எடுத்துள்ளதே? என்று ஏளனமாக பார்த்தனர்.

ஆனால் இவரது திறமையை பார்த்துதான் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அவரை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

மழையால் ஆட்டம் 8 ஓவராக குறைக்கப்பட்டது. பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. டாம் பாண்டன் - கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டாம் பாண்டன் 16 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். இவர் சுழற்பந்து வீச்சாளர் அர்ஜூன் நாயர் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் அடிக்கவில்லை. அதன்பின் ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 19 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதனால் ஐபிஎல் 2020 சீசனில் இவரது அதிரடியை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com