கிணத்துக்கடவு அருகே கடன் தொல்லையால் மின்வாரிய ஊழியர் தற்கொலை

கிணத்துக்கடவு அருகே கடன் தொல்லையால் மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை கிணத்துக்கடவு மணிகண்டபுரம் விஜய லட்சுமி அவென்யூவை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 48). மின் ஊழியர். இவர் கடன் வாங்கியுள்ளார். உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று விருதுநகர் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (38) கட்டிட தொழிலாளி. இவர் கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (40). கட்டிட தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவதன்று மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் மது குடித்து விட்டு சாலையோரத்தில் கிடந்தார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலியபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com