கிணத்துக்கடவு அருகே கள் விற்ற 2 பேர் கைது

கிணத்துக்கடவு அருகே கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி, நெம்பர்.10 முத்தூர் ஆகிய பகுதிகளில் கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது கள் விற்றதாக கொண்டம்பட்டியில் அண்ணா நகரை சேர்ந்த நாகராஜ்(வயது 43), நெம்பர்.10 முத்தூரில் ஞானபிரகாஷ்(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com