கொரியா ஓபன் டென்னிஸ்- அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன்

கொரியா ஓபன் டென்னிஸ் தொடரில் நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ் குரோசியா வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #KoreaOpen
கொரியா ஓபன் டென்னிஸ்- அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன்
Published on

2-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டேன்ஸ்க்கு குரோசியா வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட்டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கிகி பெர்ட்டென்ஸ் 7(7)-6(2) என கடும் பேராட்டத்திற்குப் பின் கைப்பற்றினார்.

ஆனால் 2-வது செட்டை 4-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார். ஆனால் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கக் கூடிய 3-வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-2 என 3-வது செட்டை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com