கேரளா: அரசுக்கு எதிராக கருத்து கூறிய டிஜிபி திடீர் சஸ்பெண்ட்

கேரளா அரசை தாக்கி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய டிஜிபி ஜேக்கப் தாமசை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளா: அரசுக்கு எதிராக கருத்து கூறிய டிஜிபி திடீர் சஸ்பெண்ட்
Published on

திருவனந்தபுரம்:  

திருவனந்தபுரத்தில் ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கேரளா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த ஜேக்கப் தாமஸ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘கேரளாவில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் ஊழலுக்கு எதிராக போராட மக்கள் அஞ்சுகின்றனர். ஊழல்வாதிகள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக உள்ளனர். இவர்களிடம் அதிகாரம் உள்ளதால், ஊழலுக்கு எதிரானவர்களை நசுக்கி விடுகின்றனர்.

ஓக்கி புயல் பாதிப்பில் கேரள அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. கடலுக்கு சென்றது சாதாரண மீனவன் என்பதால் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. ஆனால் இதே நிலை பணக்காரர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அரசு இவ்வாறு நடந்திருக்குமா?’ என பேசினார்.

டி.ஜி.பி. ஜேக்கப் தாமசின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரள அரசு ஜேக்கப் தாமசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com