கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகளுக்கு 15ந் தேதி திருமணம்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகளுக்கு 15-ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவரை மணக்கிறார்.
வீணா - முகமது ரியாஸ்
வீணா - முகமது ரியாஸ்
Published on

திருவனந்தபுரம்:

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவரது மகள் வீணா விஜயன். தகவல் தொழில் நுட்ப நிபுணரான இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. இந்த நிலையில் அவருக்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக இருக்கும் முகமது ரியாசுக்கும் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

இவர்களின் திருமணம் ஏற்கனவே நடப்பதாக இருந்தது. கொரோனா பிரச்சினையால் திருமணம் தள்ளிபோனது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி இவர்களின் திருமணம் நடக்க இருக்கிறது.

முகமது ரியாஸ் - வீணா திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வருகிறார்கள். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.

முகமது ரியாஸ் - வீணா இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com