கேரள சட்டசபை: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் - பெண் மந்திரி பதவி விலக கோரிக்கை

மந்திரி சைலஜா பதவி விலகக்கோரி இன்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேரள சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கேரள சட்டசபை: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் - பெண் மந்திரி பதவி விலக கோரிக்கை
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராய் விஜயன் மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் சைலஜா. கேரளாவில் உள்ள சுய நிதி மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான கட்டணத்தை உயர்த்தியதை மந்திரி சைலஜா தடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள். அவரை கண்டித்து சட்டசபை வளாகத்தில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த நிலையில் மந்திரி சைலஜா பதவி விலகக்கோரி இன்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் அவர்கள் சட்டசபை முன்பு திரண்டு நின்று மந்திரியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com