கேரள விவசாய மந்திரி சுனில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரள மாநிலத்தின் விவசாயத்துறை மந்திரியான சுனில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விவசாய மந்திரி சுனில் குமார்
விவசாய மந்திரி சுனில் குமார்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் நேற்று 4,125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 40,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் விவசாயத் துறை மந்திரியாக பதவி வகித்து வரும் சுனில் குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மூன்றாவது மந்திரி சுனில் குமார். ஏற்கனவே, நிதி மந்திரி தாமஸ் மற்றும் தொழில்துறை மந்திரி ஜெயராஜன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com