திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை

கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில், அவரது உடல்நிலை சீராகி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை
Published on
சென்னை:

இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் போலீசாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கருணாநிதிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
X

Maalai Malar
www.maalaimalar.com