வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் 4-ந்தேதி தொடக்கம்

அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது. #kathiriVeyil #AgniNatchathiram
வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் 4-ந்தேதி தொடக்கம்
Published on

அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மே‌ஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.

இந்த கால கட்டத்தை ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்று சொல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் நீடிக்கிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21-வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும்.

இந்த ஆண்டை பொறுத்த வரையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை சுட்டெரித்தது.

வெயில் உக்கிர காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சீரான வெப்ப நிலை இல்லாதவர்களுக்கு வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com