கரூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று

கரூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோன வைரஸ்
கொரோன வைரஸ்
Published on

கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் 19 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஜவகர் பஜார் கணபதி லைன் பகுதியை சேர்ந்த 54 வயது பெண், 44 வயது ஆண் ஆகியோருக்கும், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 78 வயது முதியவருக்கும், வெண்ணைமலை சேர்ந்த 35 வயது இளைஞருக்கும், செங்குந்த புரத்தை சேர்ந்த 49 வயது ஆணுக்கும், பசுபதி பாளையத்தை சேர்ந்த 44 வயது ஆண் , மண் மங்கலத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கும், வடக்கு பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசாலையை சேர்ந்த 32 வயது இளைஞருக்கும், கந்தசாரபட்டியை சேர்ந்த 60 வயது ஆண், புது தெருவைச் சேர்ந்த 57 வயது பெண்ணிற்கும், சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணிற்கும், குரும்ப பட்டியை சேர்ந்த 61 வயது ஆணுக்கும், வரிக்காபட்டியை சேர்ந்த 60 வயது பெண்ணிற்கும், ஐய்யம் பாளையத்தை சேர்ந்த 50 வயது பெண்ணிற்கும், பஞ்சமாதேவி பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கும், தெற்கு தெருவைச் சேர்ந்த 55 வயது ஆணுக்கும், தவிட்டுபாளையத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணிற்கும், என 19 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com