குன்னத்தூரில் ரூ.5.50 லட்சத்திற்கு கருப்பட்டி ஏலம்

குன்னத்தூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
கருப்பட்டி
கருப்பட்டி
Published on

குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 2000 கிலோ தென்னங்கருப்பட்டி ,2000 கிலோ பனங்கருப்பட்டியை கொண்டு வந்திருந்தனர்.

தென்னங் கருப்பட்டி கிலோ 114 ரூபாய் 20 பைசா வீதம் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 400-க்கும், பனங்கருப்பட்டி கிலோ 160 ரூபாய் 60 பைசா வீதம்  ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 200 என மொத்தம் ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 600 க்கு ஏலம் போனது. மேற்கண்ட தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com