திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் - மு.க அழகிரி தகவல்

காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் - மு.க அழகிரி தகவல்
Published on

சென்னை:

தி.மு.க தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதையடுத்து, இன்று காலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள தொண்டர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் காவிரி மருத்துவமனைக்கு வருவதும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதுமாக இருந்தனர். மேலும், கருணாநிதியை சந்திக்க அவரது மனைவி தயாளு அம்மாள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பு அதிகமானது.

இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi

X

Maalai Malar
www.maalaimalar.com