ட்விட்டரில் டிரெண்டாகும் கருணாநிதி ஹேஷ்டேக் - இந்திய அளவில் முதலிடம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், கருணாநிதி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi
ட்விட்டரில் டிரெண்டாகும் கருணாநிதி ஹேஷ்டேக் - இந்திய அளவில் முதலிடம்
Published on

சென்னை :

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்த மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பிராதன சமூக வலைதளமான ட்விட்டரிலும் கருணாநிதி (#Karunanidhi) ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் காவேரி ஹாஸ்பிட்டல் (#KauveryHospital), கனிமொழி (#Kanimozhi) உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi #KauveryHospital

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com