பேசுவதற்கு வசதியாக கருணாநிதி கழுத்தில் உணவு குழாய் மாற்றம்

கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளிக்க கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உணவு குழாய் அகற்றப்பட்டு சிறு குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
பேசுவதற்கு வசதியாக கருணாநிதி கழுத்தில் உணவு குழாய் மாற்றம்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதித்ததால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

உடல்நிலை தேறிய நிலையில் சமீபத்தில் முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார்.

கழுத்தில் உணவு குழாய் பொருத்தப்பட்டு இருப்பதால் சரியாக பேச முடிவதில்லை.

தற்போது முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் பல் அடுத்து கண் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குடல் பரிசோதனை செய்ய திட்டமிட்ட நிலையில் தற்போது அது தேவையில்லை என்று டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உணவு குழாயை அகற்றி பேச்சு பயிற்சி அளிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் உணவு குழாய் அகற்றப்பட்டு சிறு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த குழாயும் அகற்றப்பட்டு அதன் பிறகு பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com