பட்ஜெட் விலையில் கார்பன் ஔரா நோட் 2 வெளியானது

கார்பன் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஔரா நோட் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார்பன் ஔரா நோட் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.
பட்ஜெட் விலையில் கார்பன் ஔரா நோட் 2 வெளியானது
Published on

புதுடெல்லி:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான கார்பன் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஔரா நோட் 4ஜி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியாகியுள்ள ஔரா நோட் 2 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது. 

புதிய கார்பன் ஔரா நோட் 2 ஸ்மார்ட்போனுடன் ஃபேஷன் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்ஜின் கொண்டு வேலை செய்யும் செயலி புகைப்படங்களில் உள்ள ஆடைகளை தேட முடியும். இத்துடன் வீடியோ சர்ச் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.  

கார்பன் ஔரா நோட் 2 சிறப்பம்சங்கள்: 

* 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே

* 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் 

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.0

* 2900 எம்ஏஎச் பேட்டரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

கார்பன் ஔரா நோட் 2 காஃபீஃஷேம்பெயின், பிளாக்-ஷேம்பெின் மற்றும் ஷேம்பெயின் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கார்பன் ஔரா நோட் 2 விலை ரூ.6,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com