உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் பேட் - கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை

51 அடி நீளம், 6.6 டன் எடையுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் பேட் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் பேட் - கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை
Published on

சென்னை:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் இந்நேரத்தில் ‘தேசத்தை இணைக்கும் உலகக்கோப்பை’ என்ற வாசகம் சென்னையில் பரவி வருகிறது. 

மேலும், சென்னையில் உள்ள பேரங்காடிகள் (ஷாப்பிங் மால்கள்) அனைத்தும் கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. நகரம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் 51 அடி நீளம், 6.6 டன் எடையுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் பேட் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பாக கபில்தேவ் கூறுகையில், ‘மிகப்பெரிய கிரிக்கெட் பேட் ஒன்றை வைத்து இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ள பலேடியம் மற்றும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com