கண்ணமங்கலம் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு கட்டிட மேஸ்திரி பலி

கண்ணமங்கலம் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேஸ்திரி பலி
மேஸ்திரி பலி
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள துருகம் ஊராட்சியில் கோழிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 29), கட்டிட மேஸ்திரி. நேற்று பிற்பகலில் முருகன், அவரது குடியிருப்பு பகுதி வழியே செல்லக்கூடிய விழுப்புரம்-காட்பாடி ரெயில்வே தண்டவாளத்தில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது கணியம்பாடியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ரெயில் என்ஜினில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com