மதுரை பாந்தர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது காஞ்சி வீரன்ஸ்

திருநெல்வேலியில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது காஞ்சி வீரன்ஸ்
காஞ்சி வீரன்ஸ்
காஞ்சி வீரன்ஸ்
Published on

மதுரை பாந்தர்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதிய தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 12-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான விஷால், சித்தார்த் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் பாபா அபரஜித் சிறப்பாக விளையாடி 41 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் லோகேஷ்வர் 42 பந்தில் 51 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க காஞ்சி வீரன்ஸ் 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com