கலாம் படித்த பள்ளி மாணவர்களுடன் 21-ந் தேதி கமல்ஹாசன் கலந்துரையாடல்

ராமேசுவரத்தில் வருகிற பிப்ரவரி 21-ந் தேதி அரசியல் பயணத்தை தொடங்கும் நடிகர் கமல்ஹாசன், அப்துல்கலாம் படித்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். #Kamalhaasan #KamalhaasanPoliticalEntry #NaalaiNamathe
கலாம் படித்த பள்ளி மாணவர்களுடன் 21-ந் தேதி கமல்ஹாசன் கலந்துரையாடல்
Published on

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ந் தேதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தொடங்குவதாகவும், அன்று கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தி வருகிறார்.

அரசியல் பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் வீட்டில் அவரது அண்ணன் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து பேசுகிறார். பின்னர் ராமேசுவரத்தில் அப்துல்கலாம் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதைத்தொடர்ந்து மீனவர்களை சந்தித்து குறைகேட்கிறார். பின்னர் அப்துல்கலாம் நினைவகத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

அங்கிருந்து ராமநாதபுரம் வரும் கமல்ஹாசன் புதிய கட்சியின் பெயர், கொடியை அறிவிக்க உள்ளார் என கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  #Kamalhaasan #KamalhaasanPoliticalEntry #NaalaiNamathe

X

Maalai Malar
www.maalaimalar.com