சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய கமல்ஹாசன் கட்சியின் கொடி

கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் இலச்சினை (‘லோகோ’) போன்று இருப்பதாக கருத்துகள் வெளியாகி உள்ளன. #KamalHaasanpartyLaunch
சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய கமல்ஹாசன் கட்சியின் கொடி
Published on

சென்னை:

மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் ஆகியவற்றை அறிவித்தார்.

‘மக்கள் நீதி மய்யம்’ என்று அவர் தனது கட்சிக்கு பெயர் வைத்து இருக்கிறார். வெள்ளை நிறம் கொண்ட அவரது கட்சியின் கொடியில், ஒன்றுடன் ஒன்று இணைந்த 6 கைகளுக்கு மத்தியில் நட்சத்திரம் இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று உள்ளது. மேலும் கட்சியின் பெயரும் கொடியில் இடம்பெற்று இருக்கிறது.

கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் இலச்சினை (‘லோகோ’) போன்று இருப்பதாக கருத்துகள் வெளியாகி உள்ளன.

மும்பை செம்பூரில் உள்ள ‘தமிழர் பாசறை’ என்ற அமைப்பின் இலச்சினையில், வட்ட வடிவில் 6 கைகள் கோர்த்து இருப்பது போன்றும், அதன் நடுவில் ‘அ’ என்ற எழுத்தும் உள்ளது. இதேபோல், தேசிய தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் (என்.எப்.டி.இ) கொடியில், வட்ட வடிவில் கைகள் கோர்த்து இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று இருக்கிறது.

இவற்றினை குறிப்பிட்டு, அதுபோன்று கமல்ஹாசன் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள உருவம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் காரசாரமாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.  #KamalHaasanpartyLaunch

X

Maalai Malar
www.maalaimalar.com