சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன்

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துக்கொண்ட கமல் சென்னை திரும்பி இருக்கிறார். ஓய்வில் இருந்துகொண்டே கட்சி பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருக்கும் கமல் அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பில் பிப்ரவரி மாதம் இணைகிறார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் வலது கால் 2016-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் முறிந்தது.

அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. அந்த கம்பியை அகற்றுவதற்காக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நவம்பர் 22-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கம்பி அகற்றப்பட்டது. டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஓய்வில் இருந்த கமல்ஹாசன், நவம்பர் 27-ந்தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

2 வார மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துக்கொண்ட கமல் நேற்று முன்தினம் சென்னை திரும்பி இருக்கிறார். ஓய்வில் இருந்துகொண்டே கட்சி பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருக்கும் கமல் அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பில் பிப்ரவரி மாதம் இணைகிறார்.

கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இதில் சித்தார்த்தும் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com