

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று காலை ஒட்டப்பிடாரம் தேர்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதவது:-
‘இன்று உலக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தினம். அதற்கு முதலில் வாழ்த்துக்கள். நான் சிறு பத்திரிகை ஒன்றை நடத்தி வந்துள்ளேன்.
எனவே இது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் வாழ்த்து. நான் இப்போது 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக புறப்பட்டு இருக்கிறேன். முந்தைய பிரசாரம் போல இதுவும் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி:- தேர்தலில் உங்கள் கட்சிக்குவெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- நன்றாக இருக்கும் என்றுதான் கணிப்புகளில் சொல்கிறார்கள். அதை நாங்களும் நம்புகிறோம்.
கே:- உங்கள் கட்சியின் விளம்பரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 4 தொகுதிகளுக்கான தேர்தலிலும் அது தொடருமா?
ப:- விளம்பரங்கள் வாக்குகளாக மாறி இருப்பதாக சொல்கிறார்கள். அதுபோன்ற முயற்சிகள் தொடரும்.
ப:- அது அ.தி.மு.க.வுக்குள் இருக்கும் உள்பூசல்கள்.
கே:- சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக தகவல் வருகிறதே?
ப:- கொண்டு வரலாம். இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.