களியக்காவிளை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது

களியக்காவிளை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
களியக்காவிளை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
Published on

நாகர்கோவில்:

களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையில் உள்ள காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 36).

பிரசாத்துக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இவரது வீடு அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.

அக்கம் பக்கத்து வீடுகள் என்பதால் அந்த மாணவி பிரசாத்துடனும் பேசி வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். அவர், வீட்டிற்கு திரும்பி வந்தபோது அந்த வழியாக பிரசாத் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அவர், மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் ஏறும்படியும் மாணவியை வீட்டில் விட்டு விடுகிறேன் என்றும் கூறினார். மாணவி மோட்டார் சைக்கிளில் ஏறியதும் பிரசாத் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றார்.

அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுபற்றி மாணவி, பெற்றோரிடம் கூறி அழுதாள். அவர்கள் காட்டாக்கடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர்.

பின்னர் அவரை நெய்யாற்றின்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com