கைதிகளுக்கு கபசுர குடிநீர்

கிளை சிறைச்சாலையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர்
கபசுர குடிநீர்
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருமங்கலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கிளை சிறைச்சாலையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி பாரதி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேணுகா, குற்றவியல் நீதிபதி அருண் ஆகியோர் கபசுர குடிநீரை வழங்கினர். வழக்கறிஞர் சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com