

35 போட்டிகள் முடிவில் யுவான்டஸ் 88 புள்ளிகளும், நபோலி 84 புள்ளிகளும் பெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையில் நான்கு புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருந்தது.
இந்நிலையில் 36-வது ஆட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யுவான்டஸ் சொந்த மைதானத்தில் போலோக்னா அணியை எதிர்கொண்டது. இதில் யுவான்டஸ் 3-1 என வெற்றி பெற்று மூன்று புள்ளிகள் பெற்றது. இதன்மூலம் 91 புள்ளிகள் பெற்றது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நபோலி சொந்த மைதானத்தில் டோரினோ அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. இந்த டிராவால் ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் நபோலிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது நபோலி 36 போட்டிகளில் முடிவில் 85 புள்ளிகள் பெற்றுள்ளன.