18 ஆண்டுகளுக்கு முன் பெண் நிருபரை கட்டித் தழுவியதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது புகார்

கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ 18 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் நிருபரை கட்டித்தழுவியதாக புகார் எழுந்துள்ள நிலையில் அவர் அதற்கு பதிலளித்துள்ளார்.
18 ஆண்டுகளுக்கு முன் பெண் நிருபரை கட்டித் தழுவியதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது புகார்
Published on

ஒட்டாவா:

கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்து வருகிறார். 18 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன்னை கட்டி தழுவியதாக பெண் நிருபர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிரஸ்டன் நகரில் இசை திருவிழா நடந்தது. அதில் 28 வயதான ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியலில் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் பெண் நிருபரை ஐஸ்டின் கட்டித் தழுவி தவறான ‘செக்ஸ்’ நடத்தையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் கனடா தேசிய தினமான நேற்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நான் தவறான ‘செக்ஸ்’ நடவடிக்கையில் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

“எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. கிரஸ்டன் நகரில் பனிப்பாறை பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய இசை விழாவில் கலந்து கொண்டேன். அப்போது இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை” என்றார். #JustinTrudeau

X

Maalai Malar
www.maalaimalar.com